கொற்றிகோடு · கன்னியாகுமரிசெய்தி / விளம்பரத் தொடர்பு ↗
கொற்றிகோடுKOTTICODE.COM

நம் ஊர். நம் மக்கள்.
நம் கதைகள்.

MARATHTHAN 2026 டிசம்பர் 31 · பதிவு செய்யுங்கள்
← செய்திகள்சமூக நிகழ்வு

பண்ணி பொத்தை HMS சபையில் 9வது சபை நாள் விழா

பண்ணி பொத்தை HMS சபையின் 9வது சபை நாள் விழா, நன்றி தொழுகை மற்றும் அன்பின் விருந்துடன் 15 நவம்பர் 2026 அன்று நடைபெற்றது.

15 நவம்பர் 2026 · ஆதாரம்: வழங்கப்பட்ட செய்தி மற்றும் புகைப்படம்
பண்ணி பொத்தை HMS ஆலயத்தில் 9வது சபை நாள் விழாவின்போது கூடியிருந்த மக்கள்பண்ணி பொத்தை HMS சபையின் 9வது சபை நாள் விழா — வழங்கப்பட்ட புகைப்படம்.

பண்ணி பொத்தையில் சி.எஸ்.ஐ. கன்னியாகுமரி பேராயத்தின் கீழ் செயல்பட்டு வரும் HMS சபையின் 9வது சபை நாள் விழா இன்று (15 நவம்பர் 2026) நடைபெற்றது.

காலை 10 மணிக்குத் தொடங்கிய சபை நாள் நன்றி தொழுகைக்கு மூலச்சல் சேகரத்துப் போதகர் தலைமை தாங்கினார். இச்சபையின் போதகர் சீகன் ராய் முன்னிலை வகித்தார்.

தொழுகை நிறைவடைந்த பின்னர் அனைவருக்கும் அன்பின் விருந்து பரிமாறப்பட்டது.